இளம் கிரிக்கெட் வீரரை பாராட்டிய பிரதமர் மோடி..!

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரிய வன்ஷியையும், அவரது குடும்பத்தினரையும் இன்று பாட்னா விமான நிலையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். “அவரது கிரிக்கெட் ஆட்டத் திறன் ஒட்டு மொத்த நாட்டிலும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்” என்று மோடி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “பாட்னா விமான நிலையத்தில் இளம் கிரிக்கெட் வீர்ர் வைபவ் சூரிய வன்ஷியையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்தேன். அவரது கிரிக்கெட் ஆட்டத் திறன்கள் நாடு முழுவதும் பாராட்டப்படுகின்றன. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.