அம்பானி வீட்டு திருமணம் : மணமக்களை நேரில் வாழ்த்திய பிரதமர் மோடி..!
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீடா தம்பதியிரின் 3வது மகன் ஆனந்த், இவருக்கும் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் மும்பையில் ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் நேற்று முன்தினம் (ஜூலை 12-ம் தேதி ) கோலாகலமாக துவங்கியது. அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வி.ஐ.பி.க்கள் , தொழிலதிபர்கள், முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க மஹாராஷ்டிரா வந்துள்ள பிரதமர் மோடி , மும்பையில் நேற்று நடந்த முகேஷ் அம்பானி மகன் திருமண சுப ஆசீர்வாத்'' நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக, பிரதமர் மோடியை வாசலில் வந்து வரவேற்று அழைத்து சென்றார் முகேஷ் அம்பானி.
Anant-Radhika Wedding Day 2| PM Modi blesses the newly wedded couple Anant Ambani & Radhika Merchant https://t.co/8eR0cI1tQB pic.twitter.com/mvloB61axM
— Siddhant Anand (@JournoSiddhant) July 13, 2024
.png)