1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் கொடுத்து கவுரவிப்பு..!

Q

டில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஆச்சாரிய வித்யானந்த் மகராஜ் நூற்றாண்டு விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மத்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகம் மற்றும் பகவான் மகாவீர் அஹிம்சா பாரதி அறக்கட்டளை இணைந்து நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, பிரதமருக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த நூற்றாண்டு விழா 2025 ஜூன் 28 முதல் 2026 ஏப்ரல் 22-ம் தேதி வரை கொண்டாடப்படும். இதன் ஒரு பகுதியாக ஆச்சாரிய வித்யானந்த் மகராஜ் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் நோக்கில் நாடு முழுவதும் பல்வேறு கலாச்சார, இலக்கிய, கல்வி மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

Trending News

Latest News

You May Like