1. Home
  2. தமிழ்நாடு

கும்பமேளா நெரிசலில் இறந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்..!

Q

வட இந்தியாவில் மக மாதத்தில் வரும் அமாவாசை, மவுனி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இதையொட்டி மகா கும்பமேளாவில் இன்று (புதன்கிழமை) 10 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதை முன்னிட்டு அம்ரித் கால ஸ்தானம் (புனித நீராடல்) மிகவும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இன்று மவுனி அமாவாசை என்பதால் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட அதிகளவில் பக்தர்கள் திரண்டிருந்த நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர். இதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது.

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசல் தொடர்பாக பிரதமர் மோடி யோகி ஆதித்யநாத்தை 4 முறைக்கும் அதிகமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்தார். மேலும் கும்பமேளா நிகழ்வுகளை பிரதமர் உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கும்பமேளா நெரிசலில் இறந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்; மீட்பு பணிகள் தொடர்பாக முதல்வர் யோகியுடன் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறேன் என கூறியுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like