தேசிய கல்வி தினம்- பிரதமர் மோடி பதிவு..!
தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நமது நாட்டின் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்கான அவசியம் ஏற்படாத வகையில் நமது கல்வி முறையை உருவாக்க விரும்புகிறோம். நடுத்தர குடும்பங்கள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவு செய்யத் தேவையில்லை. வெளிநாட்டிலிருந்து மக்களை ஈர்க்கும் கல்வி நிறுவனங்களை உருவாக்க விரும்புகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.