1. Home
  2. தமிழ்நாடு

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி..!

1

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி 48 மணி நேர தியானத்தில் ஈடுபடுகிறார். 1892 இல் சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த அதே இடமான தியான் மண்டபத்தில் பிரதமர் தனது தியானத்தைத் தொடங்குவார்.

2019 லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக, பிரதமர் மோடி உத்தரகாண்டில் இதேபோன்ற ஆன்மீக பயணத்தை மேற்கொண்டார். அப்போது, ​​அவர் கேதார்நாத் அருகே உள்ள புனித குகையில் தியானம் செய்து கொண்டிருந்தார்.

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் நரேந்திரமோடி இன்று முதல் 3 நாட்கள் தியானம் செய்ய உள்ளார். இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து தனி ஹெலிகாப்டர் முலமாக புறப்பட்டு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்கினார்.

சிறிது நேரம் அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்த பின்பு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து கார் மூலமாக கன்னியாகுமாரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார். பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் முடித்த பின் பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபம் செல்கிறார். அதனை தொடர்ந்து கடல் நடுவே அமைத்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல பூம்புகார் படகு போக்குவரத்துக்கு கழகத்தின் தனி படகில் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்கிறார். இன்று மாலை தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 45 மணி நேரம் தியானம் செய்வதாக தகவல் வெளியகியுள்ளது.

பிரதமர் வருகையை முன்னிட்டு போலீசார் மட்டுமின்றி மத்திய பாதுகாப்பு படை போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கடலோர பாதுகாப்பு ஏடிஜிபி சந்தீப் தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்பும், தென்மண்டல ஐ.ஜி கண்ணன் மற்றும் டிஐஜி பிரவேஷ்குமார், எஸ்.பி சுந்தரவேலன் ஆகியோர் தலைமையில் மொத்தம் 11 எஸ்.பிக்கள் கொண்ட 3,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இங்கு தான் அவர் 45 மணிநேரம் தியானம் செய்து நாளை மறுநாள் மதியம் டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.இந்நிலையில் தான் விவேகானந்தர் பாறை நினைவு மண்டபத்தில் பிரதமர் மோடி அணிந்திருந்த உடை தற்போது கவனம் பெற்றுள்ளது. பிரதமர் மோடி தமிழ் பாரம்பரிய உடையில் அங்கு சென்றார். அதாவது பிரதமர் மோடி பட்டு சட்டை, வேஷ்டி அணிந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்குள் அடியெடுத்து வைத்தார். அதன்பிறகு அங்குள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் பகவதி அம்மன் கால் பதித்த இடத்தில் மலர் வைத்து பிரதமர் மோடி வணங்கினார்.

அன்னை சாரதா தேவி, ராமகிருஷ்ண பரமஹம்சர் படத்துக்கும் பிரதமர் மோடி மலர்தூவி வணங்கினார். இதையடுத்து நினைவு மண்டபத்தில் உள்ள சுவாமி விவேகானந்தரின் முழு உருவ சிலையின் முன்பு சென்ற பிரதமர் பாதத்தில் மலர்வைத்து வணங்கினார். அங்கு சில விநாடிகள் பிரதமர் மோடி கை கூப்பி, கண்களை மூடி அமைதியாக நின்றார். அதன்பிறகு அவர் விவேகானந்தர் தியான மண்டபத்தில் நின்றபடி கடல் அழகை ரசித்தார்.

பிரதமர் மோடி வேட்டி, சட்டை அணிவது இது முதல்முறைல்ல. இதற்கு முன்பும் தேர்தல் பிரசாரம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக தமிழகம் வந்தபோதெல்லாம் பிரதமர் மோடி வேட்டி, சட்டை அணிந்து கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.


 

Trending News

Latest News

You May Like