1. Home
  2. தமிழ்நாடு

மோடி கா பரிவார் என்ற வார்த்தையை நீக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தல்..!

1

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக ஆதவாளர்கள் பலர் தங்கள் சமூகவலைதள கணக்குகளில் தங்கள் பெயர்களுக்கு அருகே 'மோடி கா பரிவார்' என்ற சொல்லை சேர்த்தனர். இதற்கு தமிழில் 'மோடியின் படை' என்று பெயர். ட்விட்டர், பேஸ்புக் என பல கணக்குகளில் பாஜக ஆதரவாளர்களுக்கு பெயர்ளுக்கு பின்னால் இந்த சொல் இருந்ததை பார்க்க முடிந்தது.

இந்நிலையில், இந்த 'மோடி கா பரிவார்' என்ற சொல்லை நீக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி தற்போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சமூக வலைதள கணக்குகளில் உள்ள பெயருக்கு பின்னால் மோடி கா பரிவார் என்ற வார்த்தையை இணைத்தனர். அது எனக்கு மிகுந்த பலம் அளித்திருந்தது. இந்திய மக்களும் நமக்கு மூன்றாவது முறையாக பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். இது ஒரு சாதனை. இதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல, உங்கள் சமூக வலைதளங்களில் இருந்து மோடி கா பரிவார் என்ற சொல்லை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அந்த பெயர் காட்சியில் இருந்து வேண்டுமானால் நீங்கலாம். ஆனால், நாம் நாட்டுக்காக பாடுபடும் ஒரே பரிவார் என்பது என்றைக்கும் மாறாது" எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது, பாதுகாவலர் (இந்தியாவின் பாதுகாவலர்களாம்) என்பதை குறிக்கும் வகையில் Chowkidar என்ற வார்த்தையை பாஜகவினரும், பாஜக ஆதரவாளர்களும் தங்கள் சமூக வலைதள பெயர்களுக்கு பின்னால் சேர்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Trending News

Latest News

You May Like