திருச்சி வருகிறார் பிரதமர் மோடி..!
திருச்சியில் கடந்த 2-ந் தேதி நாட்டின் பிரதமர் மோடி நேரில் வந்து பாரதிதாசன் பல்கலைகழக விழாவில் கலந்து கொண்டார். இதுமட்டுமல்லாமல் 1000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தையும் திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து திருச்சியை சுற்றி இருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார். அப்போது திருச்சியில் அவர் பேசும் போது இந்த வருடத்தில் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி என்றும் திருச்சியை புகழ்ந்தும் பேசினார்.
இந்நிலையில் பிரதமர் மோடி அயோத்தியில் ராமர் கோவிலை வருகிற 22-ந் தேதி திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி ஒவ்வொரு ஊரில் உள்ள முக்கிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகிறார். ஆந்திரா, கேரளாவில் தற்போது வழிபாடு நடத்தி வருகிறார்.
அதன்படி சென்னைக்கு பிரதமர் மோடி வருகிற 19-ந் தேதி வருவதாகவும், அங்கிருந்து திருச்சிக்கும் 20-ந் தேதியும் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. திருச்சிக்கு வரும் பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோவிலில் வழிபாடு செய்கிறார். இதனைத்தொடர்ந்து ராமேஸ்வரம் சென்று அங்கும் வழிபாடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக வரும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்க பாஜகவினர் தயாராக உள்ளனர். ஒரே மாதத்தில் திருச்சிக்கு இரண்டாவது முறையாக வரும் பிரதமரைக்காண மக்களும் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர்.