1. Home
  2. தமிழ்நாடு

மகளிர் தினத்தில் ஸ்வீட் நியூஸ் அறிவித்த பிரதமர் மோடி!

1

மத்திய அரசு 2016 ஆம் ஆண்டு பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தின் வாயிலாக வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் பல கோடி குடும்பங்களுக்கு மத்திய அரசு இலவச சிலிண்டர் எரிவாயு மற்றும் அடுப்பை வழங்கியுள்ளது. பயனர்களுக்கான வீட்டு உபயோக சிலிண்டருக்கான முன்வைப்பு பணம் ரூபாய் 1600 ஐ மத்திய அரசு எல்பிஜி நிறுவனங்களுக்கு செலுத்தும். மேலும் முதல் முறை சிலிண்டர் மற்றும் அடுப்பு இலவசமாக வழங்கப்படும். இதன் பின்னர் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மத்திய அரசின் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேஸ் சிலிண்டர்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

இது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், "இந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 10.27 கோடிக்கும் அதிகமானோர் உஜ்வாலா திட்டத்தின் சமையல் எரிவாயு சிலிண்டரை பெற்று வருகின்றனர்.இவர்களுக்கு கடந்த ஆண்டு மானிய தொகை ரூ.200லிருந்து ரூ.300ஆக மத்திய அரசு உயர்த்தியிருந்தது. எனவே டெல்லியில் ஒரு சிலிண்டரை ரூ.603க்கு பெற்றுக்கொள்ள முடியும். இந்நிலையில் இந்த ரூ.300 மாானிய தொகையை மேலும் ஓராண்டுக்கு நீடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. 2024-25 நிதியாண்டில் இதற்காக அரசு ரூ.12,000 கோடியை செலவழிக்கும். கடந்த 2020ஐவிட தற்போது ரீஃபில்களில் கணிசாமாக அதிகரித்துள்ளன" என்று கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like