1. Home
  2. தமிழ்நாடு

மான் கீ பாத் நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு..!

1

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மனதின் குரல் என்ற பெயரில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் 114-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது,

இன்றைய நிகழ்ச்சி என்னை உணர்ச்சிவசப்பட வைக்கப் போகிறது. இது பல பழைய நினைவுகளால் என்னை வெள்ளத்தில் ஆழ்த்துகிறது. காரணம், மனதில் குரல் நிகழ்ச்சி 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

இன்னும் சில நாட்களுக்கு பிறகு, பண்டிகைக் காலம் தொடங்க உள்ளது. நவராத்திரியுடன் தொடங்கும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு, வழிபாடு, விரதம், பண்டிகைகள், மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த சூழல் எங்கும் நிலவும். இந்தப் பண்டிகைக் காலத்தில் உங்களின் பழைய தீர்மானங்களை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தலாம். 

நீங்கள் வாங்கும் அனைத்தும் கண்டிப்பாக மேட் இன் இந்தியாவாக இருக்க வேண்டும். நீங்கள் பரிசாகக் கொடுக்கும் எதையும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும். கடந்த சில வாரங்களாக பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது; 

மழைக் காலத்தில் தண்ணீரை சேமிப்பதன் மூலம் பஞ்சம் வரும் சமயத்தில் சமாளிக்க உதவும். உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமான மரக்கன்றுகளை நட்டு புதிய சாதனை படைத்துள்ளன. மரக்கன்றுகளை நடுவதி பொதுமக்களின் பங்கேற்பு உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.   

Trending News

Latest News

You May Like

News Hub