1. Home
  2. தமிழ்நாடு

இந்த தேதியை நோட் பண்ணிக்கோங்க..! செப்டம்பர் 14ம் தேதி ரேஷன் அட்டை குறை தீர்க்கும் முகாம் ..!

1

ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் போன்றவைகள் குறித்து, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில், பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு மாதமும்  மக்கள் குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் செப்டம்பர் மாதத்துக்கான குறைதீர்ப்பு முகாம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து  உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  ”பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது.

ரேஷன் கடை

அதன்படி, செப்டம்பர் மாதத்திற்கான முகாம் சென்னை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் செப்டம்பர் 14ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் என அனைத்து சேவைகளும் மேற்கொள்ளப்படும். மேலும், ரேஷன் பொருள் பெற நேரில் வருகை தர முடியாத மூத்த குடிமக்களுக்கு  அங்கீகாரச் சான்று வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like