1. Home
  2. தமிழ்நாடு

தயவு செய்து இதை மட்டும் செய்யாதீங்க..! அரியவகை கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து..!

Q

தனுஷ்கோடி முதல் ராமநாதபுரம் மாவட்டத்தின் எல்லை பகுதியான ரோஜ்மா நகர் வரை மன்னார் வளைகுடா கடல் உள்ளது. நாட்டுப் படகுகள், பைபர் படகுகள், ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு செல்லக்கூடிய விசைப்படகுகள் மூலம் வலை வைத்து மீன் பிடிக்கப்படுகிறது.மீனவர்கள் எடுத்துச் செல்லும் வலைகள் சில சமயங்களில் கடலில் மீன் பிடிக்கும் போது அறுந்து சேதமடைகின்றன. அந்த வலைகளை கடலில் போடாமல் கரைக்கு எடுத்து வந்து அப்புறபடுத்த வேண்டும்.
ஆனால் பல மீனவர்கள் சேதமடைந்த வலைகளை கடலில் அப்படியே போட்டு விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுபோன்ற கைவிடப்பட்ட வலைகள் குறிப்பிட்ட ஆழத்திற்கு கடலில் மிதக்கின்றன.
பயன்பாடற்ற பிளாஸ்டிக் இழையிலான வலைகள் பவளப்பாறைகளின் அடியில் சென்றும், அவற்றின் மேலே விழுந்தும் பவளப்பாறைகளின் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளன.
மன்னார் வளைகுடா கடலில் ஆழ் கடல் முதல் குறிப்பிட்ட தீவுகளை சுற்றி உள்ள பல இடங்களில் கைவிடப்பட்ட வலைகள் நிறைய உள்ளதால் கடல் மாசடைந்து வருகிறது.
குறிப்பாக கடல் ஆமை, டால்பின், கடல் பசு, கடல் குதிரை, நட்சத்திர மீன்கள் அரிய வகை சுறா மீன்கள் உள்ளிட்ட கடலின் தகவமைப்பில் வாழக்கூடிய உயிரினங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.
எனவே மீன் பிடிக்கும் போது விடக்கூடிய வலைகளை உரிய முறையில் அவற்றை மீண்டும் கரைக்கு எடுத்து வந்து அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். பல டன் எடையிலான வலைகளால் உயிரினங்கள் பேராபத்தை சந்திக்கின்றன.
எனவே சேதமடைந்த நிலையில் கைவிடப்படும் வலைகள், பிளாஸ்டிக் குப்பை அப்புறப்படுத்த வேண்டும்.
ஏற்கனவே கடலில் கழிவு நீர் மற்றும் கடற்கரையோர கிராமங்களில் கொட்டக்கூடிய பிளாஸ்டிக் குப்பை நேரடியாக கடலுக்குள் செல்லும் நிலையில் கடல் வாழ் உயிரினங்களுக்கு பேராபத்தாக முடிகிறது.
எனவே மன்னார் வளைகுடா வனச்சரக உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையினர் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து மீனவர்கள், மக்களுக்கு உரிய விழிப்புணர்வு நடவடிக்கை ஏற்படுத்த வேண்டும். சேதமடைந்த வலைகளை மீட்டு கரைக்கு கொண்டு வரக்கூடிய மீனவர்களுக்கு உரிய முறையில் ஊக்கப் பரிசினை வழங்கி கவுரவிக்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like