கவனமா இருங்க ப்ளீஸ்..! சார்ஜ் போட்ட மாணவிக்கு நேர்ந்த சோகம்..!

சென்னை எண்ணூரைச் சேர்ந்தவர் அனிதா(14). பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த மாணவி ஈரக் கையோடு செல்போனுக்கு சார்ஜ் போட முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. அலறிய படி மயங்கிய அனிதா மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் அனிதாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அனிதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்தவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரக் கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்டதால், மின்சாரம் தாக்கி மாணவி உயிரிழந்த அப்பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.