பின்னணிப் பாடகி உமா ரமணன் மறைவு : கணவர் உருக்கமான வேண்டுகோள்..!
பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தில் ஆனந்த ராகம் என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமான உமா ரமணன், நிழல்கள், தில்லுமுல்லு, வைதேகி காத்திருந்தாள், திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார்.
2,000ஆம் வருடத்துக்குப் பிறகு படங்களில் பாடுவது குறைந்துவிட்டாலும் 6,000-க்கும் அதிகமான மேடைக் கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரின் கணவர் வெளியிட்ட வீடியோவில், “பத்திரிகையாளர்கள் மற்றும் மீடியா நண்பர்கள் வருவதை தவிர்க்குமாறு அன்புடன் நான் கேட்டுக்கொள்கிறேன், பிரவைசி தேவைப்படுகிறது, இது மறைந்த உமா ரமணன் வேண்டுக்கோளாக எடுத்துக் கொள்ளுங்கள். நான் அவரை குரு என்று அடிக்கடி சொல்வேன். உமாவின் ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற அனைவரும் பிரார்த்தனை செய்துக் கொள்ளுங்கள்” என்றார்.