பின்னணி பாடகி பி.சுசீலா மருத்துவமனையில் அனுமதி!
பி.சுசீலா ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் 1935-ம் ஆண்டு பிறந்தவர். இவரின் தாய் மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ் மொழியை எழுத்து பிழை இன்றி நேர்த்தியாக ஒவ்வொரு சொற்களையும் உள்வாங்கி பாட கூடியவர். 89 வயதாகும் இவர்.. சமீப காலமாக திரைப்படங்களில் பாடுவது இல்லை என்றாலும், தன்னை மதித்து நிகழ்ச்சிகளுக்கு யாரேனும் அழைப்பு விடுத்தால் அதில் தவறாமல் கலந்து கொள்வார்.
இதுவரை சுமார் 50-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ள பாடகி சுஷீலா, தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, போன்ற பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். திரைப்பட பாடல்கள் மட்டும் இன்றி ஏராளமான பக்தி பாடல்களும் பாடியுள்ளார். 1957-ம் ஆண்டு மோகன் ராவ் என்பவரை திருமணம் செய்துகொண்ட பி.சுஷீலாவுக்கு, ஜெயகிருஷ்ணா என்கிற ஒரு ஒரு மகன் மட்டுமே மட்டுமே உள்ளார்.
இந்நிலையில், பிரபல பாடகி பி.சுசீலா சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேநேரம், சாதாரண வயிற்று வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், சிகிச்சையின் மூலம் வயிற்று வலியை குணப்படுத்தி விடலாம் என மருத்துவர் வட்டாரம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.