நேருக்கு நேர் மோதிக்கொண்ட விமானங்கள்...!
இண்டிகோ விமானமும் ஏர் இந்தியா விமானமும் நேருக்கு நேர் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் சென்னைக்கு புறப்பட தயாராக நின்றிருந்த நிலையில், ஓடுபாதையில் புறப்பட தயாரான இண்டிகோ விமானம் அதன் மீது மோதியது. இதில் இரண்டு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தன. நல் வாய்ப்பாக 300 பயணிகளும் காயமின்றி தப்பினர். இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.