அகமதாபாத்தில் விமானம் விபத்து பயணிகள் நிலை?

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் கட்விக் விமான நிலையத்துக்கு இன்று மதியம் 1.38 அளவில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட 5 நிமிடத்திலேயே மெகானி என்ற இடத்தில் கட்டிடங்களுக்கு நடுவில் விழுந்து நொறுங்கியது.
இந்த விமானத்தில் விமானி, கேபின் க்ரூ உட்பட மொத்தம் 242 பேர் பயணத்திருக்கின்றனர்.
தற்போது விபத்து நடந்த இடத்தில் சிவில் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள், இந்திய விமான ஆணைய அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில நிர்வாக அதிகாரிகள், உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
தற்போது வரை 30 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து தகவல்கள் வருகின்றன.
இந்தநிலையில் விமானம் தாழ்வாக பறந்து சென்று கீழே விழுந்து நொறுங்கும் வீடியோ உள்ளூர் மக்களால் எடுக்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.