#BREAKING : ராஜஸ்தானில் போர் விமானம் விபத்து : விமானி பலி..!
இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டம் ரத்தன்கர் பகுதியில் விபத்துக்குள்ளானது. வான்வெளியில் தடுமாறியபடி பறந்து வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. கிராம மக்கள் அளித்த தகவல் படி சம்பவ இடத்திற்கு, போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி, இடிபாடுகளில் சிக்கியிருந்த விமானியின் சடலத்தை மீட்பு படையினர் மீட்டனர்.
விமானம் விமானம் விழுந்ததால் வயல்வெளியில் பற்றி எரிந்த தீயை கிராம மக்கள் அணைத்தனர். விமான விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.