1. Home
  2. தமிழ்நாடு

வங்கி வேலையை திட்டமிட்டுக்கோங்க..! டிசம்பரில் 18 நாட்கள் வங்கி விடுமுறை..!

1

தங்களது வரவு - செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை பொதுமக்கள் நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.

bank

அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. டிசம்பர் மாதத்தில் சுமார் 18 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாத வங்கி விடுமுறை பட்டியல்:

டிசம்பர் 1, 2023 - வெள்ளிக்கிழமை - மாநில தொடக்க நாள்/சுதேசி நம்பிக்கை நாள் (நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம்)
டிசம்பர் 3, 2023 - ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் 4, 2023 - திங்கட்கிழமை - புனித பிரான்சிஸ் சேவியரின் விழா (கோவா, திரிபுரா)
டிசம்பர் 9, 2023 - சனிக்கிழமை - 2வது சனிக்கிழமை
டிசம்பர் 10, 2023 - ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் 12, 2023 - செவ்வாய்க்கிழமை - பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா (மேகாலயா)
டிசம்பர் 13, 2023 - புதன்கிழமை - லோசூங்/நம்சூங் (சிக்கிம்)
டிசம்பர் 14, 2023 - வியாழக்கிழமை - லோசூங்/நம்சூங் (சிக்கிம்)
டிசம்பர் 17, 2023 - ஞாயிற்றுக்கிழமை

bank
டிசம்பர் 18, 2023 - திங்கட்கிழமை - யூ சோஸோதாமின் இறந்த நாள் (மேகாலயா)
டிசம்பர் 19, 2023 - செவ்வாய்க்கிழமை - கோவா விடுதலை நாள் (கோவா)
டிசம்பர் 23, 2023 - சனிக்கிழமை - 4வது சனிக்கிழமை
டிசம்பர் 24, 2023 - ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் 25, 2023 - திங்கட்கிழமை - கிறிஸ்துமஸ்
டிசம்பர் 26, 2023 - செவ்வாய்க்கிழமை - கிறிஸ்துமஸ் (மேகாலயா, தெலுங்கானா)
டிசம்பர் 27, 2023 - புதன்கிழமை - கிறிஸ்துமஸ் (மிசோரம்)
டிசம்பர் 30, 2023 - சனிக்கிழமை - யு கியாங் நங்பா (சிக்கிம், மேகாலயா)
டிசம்பர் 31, 2023 - ஞாயிற்றுக்கிழமை

Trending News

Latest News

You May Like