நாடு முழுவதும் தற்போது பிரதமர் மக்கள் மருந்தகம் என்ற பெயரில் மருந்தகங்கள் செயல்படுகின்றன. மற்ற தனியார் மருந்தகங்களுடன் ஒப்பிடும்போது இங்கே மருந்து மாத்திரைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அதே போல் இப்போது தமிழ்நாட்டில் 1000 இடங்களில் குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் கிடைக்கும் வகையில் 'முதல்வர் மருந்தகங்கள்' இன்று திறக்கப்பட்டன.
முதல்வர் மருந்தகங்களில் 'ஜெனரிக் மருந்துகள்', 'சர்ஜிக்கல்ஸ்' 'சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் பிற மருந்துகள்' குறைந்த விலையில் கிடைக்கும். இவைகளுக்கு மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து மருந்துகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பயன் அடையும் வகையில் வெளிச்சந்தையைவிட 75 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் இங்கு மருந்து மாத்திரைகள் கிடைக்கும்.
சென்னையில் 39 இடங்களில் முதல்வர் மருந்தகம்: பற்றிய விவரம் வருமாறு:-
* கொன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம்.
* ஆர்.வி.நகர் கடைசி மெயின் சாலை, கொடுங்கையூர்.
* மன்னார்சாமி கோவில் தெரு, புளியந்தோப்பு.
* திருப்பதி கூடல் ரோடு, கலைவாணர்நகர், அம்பத்தூர்.
* கோவிந்தன் தெரு மேட்டுப்பாளையம், அருந்ததியர் நகர்.
* காந்தி தெரு, கே.எம்.நகர், கொடுங்கையூர்.
* கற்பகவிநாயகர் கோவில் தெரு, சென்னை.
* நாட்டு பிள்ளையார் கோவில் தெரு, ஏழுகிணறு.
* கல்யாணபுரம் தெரு, சூளைமேடு.
* சாமியர்ஸ் சாலை, நந்தனம்.
* லேண்டன்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம்.
* காமராஜபுரம், பாண்டிதுரை தெரு, வேளச்சேரி.
* வீரராகவராவ் தெரு, திருவல்லிக்கேணி.
* மாநகராட்சி கட்டிடம், சின்னமலை, வேளச்சேரி மெயின் ரோடு.
* நாகேஷ் தியேட்டர் அருகில், தியாகராயநகர்.
* சுந்தரம் தெரு, ராஜாஅண்ணாமலைபுரம்.
* லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர்.
* செல்லியம்மன் நகர் பிரதான சாலை, துர்கா நகர், தாம்பரம்.
* பாரதிநகர் 2-வது தெரு, பி.வி.என். ரேஷன் கடை,பல்லாவரம் தாலுகா.
* சாந்திநகர், 3-வது தெரு, குரோம்பேட்டை.
* மந்தைவெளி தெரு, புழுதிவாக்கம் பஸ் நிலையம்.
* புதிய பெத்தானியா நகர் பிரதான சாலை, வளசரவாக்கம்.
* வானகரம் பிரதான சாலை, ஆலப்பாக்கம்.
* பதுவாஞ்சேரி பிரதான சாலை, பெரியார் நகர், மாடம்பாக்கம்.
* காமராஜ் நெடுஞ்சாலை, பழைய பெருங்களத்தூர்.
* 10-வது பிளாக், கிழக்கு முகப்பேர்.
* வ.உ.சி. தெரு, மக்கரம் தோட்டம், கொளத்தூர்.
* 15-வது பிரதான சாலை, அண்ணாநகர் மேற்கு.
* 80 அடி சாலை, குமரன் நகர், பெரவள்ளூர்.
* 4-வது பிரதான சாலை, அயனப்பாக்கம்.
* துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, வெங்கடபுரம், அம்பத்தூர்.
* 3-வது பிரதான சாலை, நாராயணசாமி கார்டன், சேலவாயல்.
* பெருமாள் கோவில் தெரு, சதுமா நகர், திருவொற்றியூர்.
* 2-வது பிரதான சாலை, மாத்தூர், எம்.எம்.டி.ஏ.
* ஆண்டியப்பன் தெரு, வண்ணாரப்பேட்டை.
* 8-வது தெரு, கடற்கரை சாலை, எண்ணூர்.
* பாலசுப்பிரமணியம் சாலை, பெரியார் நகர், கொளத்தூர்.
* பி.என்.ஆர். சாலை, பழைய வண்ணாரப்பேட்டை,
பெரியார் நகர், கொளத்தூர்.
* தமிழ்நாடு தலைமைச் செயலகம், செயலக காலனி.