1. Home
  2. தமிழ்நாடு

இனி புதுச்சேரியில் பிங்க் நிற பஞ்சுமிட்டாய்க்கு தடை..!

1

புதுச்சேரி கடற்கரை சாலை, தாவரவியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வருகின்றனர். இவற்றில் விஷ தன்மை கொண்ட  ரசாயனம் கலப்பு இருப்பதாக சந்தேகம் கொண்டு  உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்து அவற்றை வாங்கி சோதனை செய்தனர். அதில் ரோடமின் பி(RHODAMINE-B) என்ற விஷ நிறமி இருப்பது தெரிய வந்தது. இது ஊதுவத்தி மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் தொழிற்சாலை விஷ நிறமி ஆகும். குறைந்த விலைக்கு கிடைப்பதினால் இதனை வடமாநில இளைஞர்கள் வாங்கி பஞ்சு மிட்டாய் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.இதனை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்து பஞ்சு மிட்டாய் பறிமுதல் செய்தனர். மேலும் விற்பனை செய்த வட மாநில இளைஞர்களை பிடித்து வந்து விசாரணை நடத்தியதுடன் அவர்களில் சிலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் மறு உத்தரவு வரும் வரை பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு விசாரணை நடத்தப்பட்டு உரிய லைசன்ஸ் வழங்கப்பட்ட பின் விற்பனை தொடங்கலாம் எனவும், பொதுமக்கள் இது குறித்து பீதி அடைய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like