ஏக்நாத்ஷிண்டே வந்த விமானத்தை ஓட்ட மறுத்த பைலட்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஜல்கானில் இருந்து மும்பைக்கு செல்ல விமான நிலையம் வந்தார். அப்போது விமானி விமானத்தை இயக்க மறுத்துவிட்டார். தன்னுடைய பணி நேரம் முடிவடைந்து விட்டது. விமானத்தை இயக்க புதிய அனுமதி பெற வேண்டும். அதற்கு சில மணி நேரம் ஆகும் என தெரிவித்தார்.
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஜல்காவ் அருகில் உள்ள மத ஊர்வலகத்தில் கலந்து கொண்டுவிட்டு மும்பைக்கு திரும்ப தயாரானார். அவர் மும்பையில் இருந்து ஜல்காவிற்கு புறப்பட தயாரானபோது அவரது விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால் விமானம் இரண்டரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. ஜல்காவ் வந்த பிறகு அங்கிருந்து சாலை மார்க்கமாக முக்தாநகர் பகுதியில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சிக்கு ஏக்நாத் ஷிண்டே சென்றார்.
அவருடன் அமைச்சர் கிரீஷ் மகாஜன் மற்றும் குலாப்ராவ் ஆகியோர் சென்றார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஏக்நாத் ஷிண்டே ஜல்காவ் வந்தார். அவர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு விமானம் இருக்கும் இடத்திற்கு வந்தார். ஆனால் பைலட் விமானத்தை இயக்க முடியாது என்று மறுத்துள்ளார்.
தனது பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறி விமானத்தை இயக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். அதோடு விமானத்தை இயக்க புதிய அனுமதி தேவை என்றும் தெரிவித்தார்.
உண்மையில் விமான பைலட்டிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால்தான் விமானத்தை இயக்க மறுத்ததாக கூறப்படுகிறது.