தமிழகத்தை கிடுகிடுக்க வைக்கப்போகும் யாத்திரை : பாஜக அதிரடி பிளான் !

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தையே திரும்பிபார்க்க வைக்கும் வகையில் ஒரு யாத்திரை நடத்த பாஜக பிளான் செய்து வருகிறது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் அதிமுக கூட்டணியில் 60 தொகுதிகளைப் பெற்று, அதில் 50 தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைக்க வேண்டும் என பாஜக அரசியல் காய் நகர்த்தி வருகிறது. அதற்கு முன்னோட்டமாக, அதிமுக கூட்டணியில் 60 சீட் வேண்டும் என, தொகுதிகள் ஒதுக்கீடுக்காக துண்டு போட்டது. பின்பு, நடிகை குஷ்பு உள்ளிட்ட பிரபலங்களை பாஜகவில் இணைய மறைமுகமாக காய் நகர்த்தியது.
இந்நிலையில், தமிழ் கடவுள் பெயரால் ஒரு யாத்திரை நடக்க பாஜக முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து இந்த யாத்திரை தொடங்கப்பட்டு, தமிழ் கடவுளான முருகன் கோவிலில் நிறைவு செய்யப்பட உள்ளதாம்.இதற்கு தமிழக அரசு தடை விதித்தாலும், தடை மீறி யாத்திரை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மாற்றாக நாம் ஏதாவது செய்தாக வேண்டுமே என எதிர்கட்சியினர் ரூம் போட்டு யோசித்து வருகிறார்களாம்.
யப்பா... என்னங்கடா அரசியல் இது.....!
newstm.in