வைரலாகும் புகைப்படங்கள்..! மரணத்திற்கு முன் போயிங் காக்பிட்டில் இருந்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி?

விஜய் ரூபானியின் இந்த புகைப்படங்கள், அவர் உயிரிழந்த விமான விபத்துக்கு பிறகு வெளியாகி உணர்வுபூர்வமான விவாதங்களை எழுப்பியுள்ளன. இந்த புகைப்படங்களில், ரூபானி காக்பிட்டில் வலதுபுற இருக்கையில், அதாவது பொதுவாக துணை விமானி அமரும் இடத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் விமானத்தின் கதவு அருகில் நின்று, பல்கலைக்கழகத்தின் விமானப் போக்குவரத்துத் துறை டீன் ராதிகா பண்டாரியுடன் உரையாடும் படங்களும் பதிவாகியுள்ளன.
இந்தச் சந்திப்பு குறித்து ரூபானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குஜராத்தி மொழியில் பதிவிட்டிருந்ததாவது: "இன்று, அகமதாபாத்தில் உள்ள 'இண்டஸ் பல்கலைக்கழக' வளாகத்தைப் பார்வையிட்டபோது, மேற்கு இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனத்தையும் சென்று பார்த்தேன். இந்தப் பயணத்தின்போது, போயிங் 737, செஸ்னா, ஜெனித் மற்றும் மிக்-21 போன்ற விமானங்களின் மாதிரிகளையும், உண்மையான விமானங்களையும் நேரடியாகப் பார்த்தேன்." மேலும், "விமானப் போக்குவரத்துத் துறை மாணவர்களுடனான உரையாடல் மிகவும் உற்சாகமாக இருந்தது. இந்திய மாணவர்கள் உலக அரங்கில் தங்கள் பெயரைப் பிரகாசிக்க வாழ்த்துகிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகைப்படத்திற்கு சர்ச்சைக்குரிய கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.