பட்டப்பகலில் கூட்டத்தின் நடுவே புகைப்பட கலைஞர் சரமாரி வெட்டி கொலை !

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தவர் தினேஷ் (33). இவரது மனைவி அனிதா (26). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 3 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில் நேற்று மதியம் தினேஷ், ஸ்டூடியோவில் இருந்தார். அப்போது, திடீரென அங்கு வந்த 4 பேர், மறைத்து வைத்திருந்த அரிவாளால், தினேஷின் கழுத்து, தலை உள்பட உடல் முழுவதும் சரமாரியாக வெட்டினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரை வெட்டிசாய்ந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
தகவலறிந்து திருவள்ளூர் டிஎஸ்பி துரைபாண்டியன் தலைமையில் திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 3 மாதங்களாக பிரிந்து வசித்து வந்துள்ளார்.
எனவே மனைவி அனிதா தரப்பில் கொலை நடந்ததா, தினேஷுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டு கொலை நடந்ததா அல்லது தொழில்போட்டியா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
newstm.in