தொலைபேசி உளவு : இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் காங்கிரஸ்!!

 | 

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தை கண்டித்து இன்று நாடு முழுவதும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்த உள்ளது.

நாட்டில் மூத்த அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், போராளிகளின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டன. இந்நிலையில் தொலை பேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தை கண்டித்து நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

pegasus

அதன்படி இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதலைவர் கே.எஸ்.அழகிரி இந்தியாவின் ஜனநாயகத்திற்கும் குடியரசுக்கும், பாதுகாப்பிற்கும் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றார்.

azhagiri

இஸ்ரேல் நாட்டு நிறுவனம் உருவாக்கிய 'பெகாசஸ்' என்ற உளவு மென்பொருள் மூலம், நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள், உள்ளிட்ட சுமார் 300 பேரின் தொலைபேசி இணைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தை மத்திய அரசு மூடி மறைக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும், இந்தப் பிரச்னை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP