1. Home
  2. தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொடர்பாக புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு ..!

1

 பொங்கல் பண்டிகை தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகைக்கு சில வருடங்கள் முன்பு அரசின் சார்பாக பரிசுத் தொகுப்புகள் மற்றும் பணம் ஆகியவை ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த வருடமும் இந்த பரிசுத் தொகுப்பை தமிழக முதல்வர் தற்போது அறிவித்துள்ளார்.

இந்த பொங்கல் பண்டிகை அறுவடை திருநாளாகவும், சூரியனுக்கு நன்றி கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. எனவே அனைத்து தரப்பினரும் இத்திருநாளை நல்ல முறையில் கொண்டாட வேண்டும் என்பதற்காக தான் இந்த பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டது.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு பெரும்பாலான மக்களுக்கு கிடைத்தாலும், சிலருக்கு கிடைப்பதில்லை, பல வகையான குழறுபடிகளும் அவ்வப்போது நடந்து கொண்டுதான் வருகிறது. எனவே இதை குறைக்க வேண்டும் என்பதற்க்காகத் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக உள்ள புகார்களை அளிக்க கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எனவே பொங்கல் பரிசு தொடர்பான புகார்களை தொரிவிக்க 1957, 1800 425 5901 ஆகிய எண்களுக்கு (Help Line Number) அழைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அளிக்கும் அனைத்து விதமான புகார்களுக்கும் உடனுக்குடன் தீர்வு காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like