1. Home
  2. தமிழ்நாடு

பீனிக்ஸ் மால் பெண் ஊழியர் குணமடைந்தார்.. டிஸ்சார்ஜ் நேரத்தில் ஒரு டிக்டாக்..!

பீனிக்ஸ் மால் பெண் ஊழியர் குணமடைந்தார்.. டிஸ்சார்ஜ் நேரத்தில் ஒரு டிக்டாக்..!


சென்னையின் பீனிக்ஸ் மாலில் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். எந்நேரம் ஆயிரக்கானோர் இதற்குள் ஷாப்பிங் செய்வார்கள். அந்த வகையில் லைப்ஸ்டைல் கடை ஒன்று இங்கு இயங்கி வருகிறது. அதில் பணிபுரிந்து வந்த அரியலூரைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதனால் அந்த மால்க்கு வந்து சென்றவர்கள் சுமார் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பாரிசோதனை செய்ததில், 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்ட அரியலூர் இளம்பெண் பூஜா, செல்போனில் டிக்டாக் செய்து வீடியோ எடுத்தார். இதில் ஒன்று, இரண்டு வீடியோக்கள் வெளியானது.

கொரோனா வைரஸ் வந்துச்சு நம்ம கிட்டதான்.. அது வந்துச்சுன்னா நம்ம எல்லாம் மட்டைதான்" கதறவிட்டாங்கோ, பதறவிட்டாங்கோ, பரவ விட்டாங்கோ.. வைரஸை பரப்பி விட்டாங்கோ.." "இப்படியே வாழந்தாக்கா புழு மட்டும் வாழும்டா, பூச்சி மட்டும் வாழுடா.. மனுஷ பய இடம் மட்டும் மண்ணாகி போகுமடா" என்று பெட்-டில் படுத்து கொண்டே டிக்டாக் வீடியோக்களை செய்திருந்தார்.

இதையடுத்து, ஆஸ்பத்திரி நிர்வாகம் அவரை கண்டித்து  அறிவுரை வழங்கியதால் டிக்டாக் செய்வதை நிறுத்திக்கொண்டார். இதனிடையே தொடர் கண்காணிப்பில் இருந்த பூஜாவுக்கு அடுத்தடுத்து டெஸ்ட்கள் 3 முறை செய்யப்பட்டன. இப்போது அந்த தொற்று முழுதும் நீங்கிவிட்டது. இது டெஸ்ட்டிலும் உறுதியானது.


இதையடுத்து அரியலூர் மாவட்ட ஆஸ்பத்திரியில் இருந்து பூஜா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டுக்கு கிளம்பும்போது அங்கிருந்த டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதார ஊழியர்களுக்கு நன்றியை சொன்னார். அங்கிருந்து போகும்போது பூஜா ஒரு டிக்டாக் செய்துவிட்டுதான் போனார். மருத்துவமனையில் இருந்தப்போது தான் வரைந்த புகைப்படத்துடன் "இனிமேல் டிக்டாக் செய்ய மாட்டேன், டிக்டாக்கை கைவிட்டுவிட்டேன்" என்பதுதான் அந்த கடைசி டிக்டாக்..

newstm.in 

 

Trending News

Latest News

You May Like