ஜூன் 13-இல் 3-ஆம் கட்ட விருது விழா - தவெக..!

பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மூன்று மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் முதல் கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த மே 30-ஆம் தேதி நடைபெற்றது. இதில், 528 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், நிகழ்வின் இரண்டாம் கட்ட விருதுகள் வழங்கும் விழா மாமல்லபுரத்தில் இன்று (ஜூன் 4) நடைபெற்றது. இதில், தமிழகத்தில் திருச்சி, ஈரோடு, கரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 75 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும், புதுச்சேரியில் 9 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இவர்கள் இன்று காலை 7 மணி முதலே நிகழ்ச்சி நடைபெறும் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு வருகை தந்தனர். இவர்களுக்கு நுழைவு பாஸ்கள் வழங்கப்பட்டு சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டன. மதிய உணவும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கல்வி விருது, சான்றிதழ், தங்க மோதிரம், கம்மல் மற்றும் ஊக்கத்தொகைகள் ஆகியவற்றை வழங்கினார். இதில், 423 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த விழாவுக்கு அடுத்தப்படியாக ஜூன் 13-ஆம் தேதி நடைபெறக்கூடிய மூன்றாம் கட்ட கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் 77 சட்டமன்ற தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் நேரில் வரவழைக்கப்பட்டு கல்வி விருதுகள் வழங்கப்பட உள்னன