மக்களவைத் தேர்தல் முடிந்ததும் டீசல் பெட்ரோல் விலை பாதியாக குறையும் - கதிர் ஆனந்த்..!
வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீதிவீதியாக காரில் சென்றபடியே மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், “மக்களவைத் தேர்தல் முடிந்ததும் டீசல் விலையும், பெட்ரோல் விலையும் பாதியாக குறையும் என்று முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துள்ளார். டீசல், பெட்ரோல் விலை குறைந்தது என்றால், விலைவாசியும் பாதியாக குறையும். எனவே விலைவாசி குறைய வேண்டும் என்றால் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என்று மக்களிடையே பேசினார்.
மேலும் வாழ்வில் யாரும் முதன்முதலில் வேலைக்கு சென்றதையும், முதல் சம்பளம் வாங்கியதையும் மறக்கமாட்டார்கள். அதேபோல், நாள் முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக ஆனதற்கு காரணம் ஆம்பூர் மக்கள் செலுத்திய வாக்குதான், அதை நான் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன் என தெரிவித்தார்.
வேலூரில் பிரச்சாரம் செய்த அவருக்கு வழிநெடுக மக்கள் தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.