மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு - பெட்ரோல், டீசல் விலை குறைய போகிறது..!
டெல்லியில் நிருபர்களிடம் பேசிய மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி,புவிசார் அரசியலில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகின்றபோதும், உலகில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை எதுவும் ஏற்படவில்லை.
பிரேசில், கயானா போன்ற நாடுகளிலிருந்து சர்வதேச சந்தைக்குக் கச்சா எண்ணெய் வினியோகம் தொடர்ந்து வருகிறது. எனவே, தடையற்ற கச்சா எண்ணெய் வினியோகம் குறித்து கவலைப்படத் தேலையில்லை.
மேலும். கடந்த காலங்களைப் போல், மாற்று வாய்ப்புகளை அடையாளம் கண்டு எந்தவொரு சூழலையும் இந்தியா திறம்பட எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடர்ந்து நிலையாக இருக்கும் என்பதோடு. வரும் நாட்களில் விலை குறையும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இது எனது தனிப்பட்ட கருத்து என்றார்.