ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை!? உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று நாடு முழுவதும் பலர் ஆன்லைனில் ரம்மி என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தோல்வி மற்றும் பணம் இழப்பு காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக காவல்நிலையங்களில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனுவுக்கு பதில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதால், இந்த வழக்கை நாளை விசாரிக்க உள்ள நீதிபதிகள் தெரிவித்தனர்.