1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுக்கு PET Scanning பரிசோதனை..!

1

முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜூலை 21) நடைபயிற்சியில் ஈடுபட்டபோது, முதல்வர் ஸ்டாலினுக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டதால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று நாட்கள் ஓய்வில் இருப்பது அவசியம் என, மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், இன்று (ஜூலை 22) PET Scanning பரிசோதனை செய்வதற்காக, அவரை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து வர டாக்டர்கள் குழு முடிவு செய்தனர். பின்னர் காலை 8 மணிக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் PET Scanning பரிசோதனை செய்யப்பட்டது.உடல் உள் உறுப்புகள் மற்றும் திசுக்கள் செயல்பாடு, நோய் பாதிப்பை கண்டறிவதற்காக இந்த PET scanning (Positron Emission Tomography) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர் மீண்டும், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

Trending News

Latest News

You May Like