கடைசி ஓவர் வரை விடாமுயற்சி...போராடி தோற்ற ஹைதராபாத் அணி..!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.
இரு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் களமிறங்குகிறது. 2016-ம் ஆண்டு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது இம்முறை புதிய கேப்டனான பாட்கம்மின்ஸ் தலைமையில் களமிறங்குகிறது. கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 208 ரன்கள் எடுத்தது.இதனை தொடர்ந்து இமாலய இலக்கான 209 எடுக்க ஹைதராபாத் அணி களமிறங்கியது. ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களான மயங்க் அகர்வாலும், அபிஷேக் சர்மாவும் அட்டகாசமான ஆட்டத்தவுடன் இன்னிங்க்ஸை தொடங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர், பவர்ப்பிளேவில் மட்டும் ஐதராபாத் அணி ஐதராபாத் அணி 65-1 ரன்கள் எடுத்து உச்சத்தில் இருந்தது.
அதிரடியாக விளையாடிய ஹென்ரிச் கிளாசென் இறுதி ஓவர் வரை அணியின் வெற்றியை கையில் வைத்திருந்தார். ஆனால் கடைசி ஓவரில் 2 பந்துக்கு 5 ரன் தேவைப்பட்ட போது ஹென்ரிச் கிளாசென் ஆட்டமிழக்க, ஆட்டம் மேலும் விறுவிறுப்பாக சென்றது.
இதனால், கடைசி 1 பந்துக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் இருந்த பேட் கம்மின்ஸ் அந்த பந்தை அடிக்காமல் நழுவ விட்டார். இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி திரில் வெற்றி பெற்றது.