1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் 4 நாட்கள் சதுரகிரி கோயிலுக்குச் செல்ல அனுமதி..!

1

சித்தர்களின் சொர்க்க பூமி என்றழைக்கப்படும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். சதுரகிரி கோயிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் வரை உயிரிழந்ததால், மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களான 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, ஜூலை 3 அன்று முதல் ஜூலை 6 வரை என நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்றும், நீரோடைகளில் குளிக்க அனுமதி இல்லை என்றும், மலைக்கோயிலில் பக்தர்கள் தங்க அனுமதியில்லை எனவும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like