சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பெரியாருக்கு கிடைத்த காணிக்கை.. முதல்வர் ஸ்டாலின்..!

27 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரியாருக்கு கிடைத்த காணிக்கை என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் 355.26 கோடி ரூபாயில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “இன்னும் சில வாரங்களில் கொரோனா தொற்று குறைந்து விடும். அதன்பிறகு நிச்சயம் ஈரோடு வருவேன்; மக்களை சந்திப்பேன்.
27 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரியாருக்கு கிடைத்த காணிக்கை. பெரியாரின் சமூக நீதி தத்துவத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்ட காலம் உருவாகியுள்ளது. இந்தியாவுக்கே சமூகநீதியை உருவாக்கிக் கொடுக்கும் பெரும் பணியை நாம் செய்து வருகிறோம்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.