"பெரியார் விஷன்" ஓடிடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிடர் கழகத்தின் 'பெரியார் விஷன்' என்ற OTT தளம் தொடக்க விழாவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ஓடிடி பதிவில், “வணக்கம்.. தந்தை பெரியார் இந்த உலகளாவிய மானுட தலைவராக பார்க்கப்படுகிறார். அந்தவகையில் இன்றைய காலத்தின் தேவையாக தொடங்கப்பட்டுள்ள பெரியார் விஷன் ஓடிடி தளத்தை பாராட்டுகிறேன்.. தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான பணியில், பல்வேறு ஊடகங்களையும், கலை வடிவங்களையும் நம்முடைய திராவிட இயக்கம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகமாகி, சமூக ஊடகங்கள் பெருகியிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் இளைஞர்களிடம் தந்தை பெரியாரின் கொள்கைகளை கொண்டு செல்லும் வகையில், சமூக நீதிக்கான உலகின் முதல் ஓடிடியாக பெரியார் விஷன் ஓடிடி தளம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கொள்கைக்காக தொடங்கப்படும் உலகின் முதல் ஓடிடியாக இதுதான் இருக்கும் என நினைக்கிறேன்.. எல்லாவற்றிலும் முன்னோடியாக திராவிட இயக்கம் இதிலும் முன்னோடியாக இருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தோட நூற்றாண்டு விழாவில், குடியரசு இதழின் நூற்றாண்டு விழாவில் பெரியார் விஷன் ஓடிடி தொடங்கப்படுவது சிறப்புக்குரியது. பெரியார் விஷன் வெல்க..! வெல்லும்.!” என்று தெரிவித்தார்.