1. Home
  2. தமிழ்நாடு

பெரியார் சில மனிதர்களை பற்றி சொல்லியிருக்கிறார்...அவர் சொன்னதை 1962 ஆம் ஆண்டு முரசொலியில் பப்ளிஷ் செய்யப்பட்டிருக்கிறது - அண்ணாமலை

1

வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம், கடந்த 2 நாட்களாக பெரியாரை பற்றி அதிகமாக தரக்குறைவாக பேசுகின்றனர். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, ‛‛பெரியாரை பற்றி தரக்குறைவாக பேசுகிறவனின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிறேன்'' என்று கூறினார். சீமான் பெயரை சொல்லாமல் அதற்கு பதில் தரும் வகையில் துரைமுருகன் விமர்சித்தார்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பெரியார் பற்றி தரக்குறைவாக பேசுபவர்களின் பிறப்பை சந்தேகப்படுவதாக அமைச்சர் துரைமுருகன் கூறியது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடன் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அண்ணாமலை பதில் அளித்து கூறியதாவது:-

நான் பெரியாரை பற்றி தான் பேசுறேன்.. என் பிறப்பில், ஒரு அப்பா அம்மாக்கு தான் நான் பிறந்தேன். விவசாயம் செய்யுற அம்மா அப்பாக்கு தான் பிறந்தேன். கிராமத்தில் தான் பிறந்தேன். அதிலும் எந்த சந்தேகமும் இல்லை. இதுவரைக்கு ஊழல் எதுவும் பண்ணதில்லை.. அதிலும் சந்தேகம் இல்லை. என் வீட்டுக்கு அமலாக்கத்துறை கடப்பாறையை எடுத்துக்கொண்டு வந்து சோதனை செய்யவில்லை. அதிலும் எந்த சந்தேகமும் இல்லை. நீங்க ரெய்டுக்கு வரும் போது பையன் வந்து துபாயில் போய் இருக்கின்ற மாதிரி ஒரு பையனை நான் பெற்கவில்லை. இதிலும் எந்த சந்தேகமும் இல்லை.

இதையெல்லாம் தாண்டி பக்கம் 21க்கு நான் பிறக்கவில்லை. அண்ணன் துரைமுருகன் பெரியாரை பற்றி பேசுபவர்களின் பிறப்பை சந்தேகப்படுகிறார் என்றால், நான் சொல்லியிருப்பதை போட்டு பார்த்துக்கொள்ளட்டும். எங்கள் பிறப்பு நல்ல பிறப்பு தான். ஆனால் பெரியார் சில மனிதர்களை பற்றி சொல்லியிருக்கிறார். அவர் சொன்னதை 1962 ஆம் ஆண்டு முரசொலியில் பப்ளிஷ் செய்யப்பட்டிருக்கிறது. எனவே துரைமுருகன் 1962 ஆம் ஆண்டு வெளியான முரசொலியை வாங்கி பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
 

Trending News

Latest News

You May Like