1. Home
  2. தமிழ்நாடு

பெரியார், அண்ணா விருதுகள் அறிவிப்பு..!

1

தந்தை  பெரியாரின் பிறந்த நாள் வரும் 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது.  அதேபோல அண்ணாவின் பிறந்த நாள் வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே, தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15, 17 ஆகிய தேதிகளில் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை முன்னிட்டு முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம். 

அந்தவகையில் இந்த ஆண்டு திமுக பவள விழா ஆண்டு முப்பெரும் விழா வரும்  17-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெறுகிறது.  இதனையொட்டி விருது பெறுவோர் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி பாப்பம்மாளுக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா விருது அறந்தாங்கி மிசா இராமநாதனுக்கு வழங்கப்பட உள்ளது. இதே போல் கலைஞர் விருது எஸ். ஜெகத்ரட்சகனுக்கும், பாவேந்தர் விருது தமிழ் தாசனுக்கும் வழங்கப்பட உள்ளது. பேராசிரியர் விருது வி.பி.ராஜனுக்கு வழங்கப்பட உள்ளது.

Trending News

Latest News

You May Like