1. Home
  2. தமிழ்நாடு

தஞ்சையில் பெரியநாயகி அம்மன் திரு உலா ! பக்தர்கள் மெய்சிலிர்ப்பு !

தஞ்சையில் பெரியநாயகி அம்மன் திரு உலா ! பக்தர்கள் மெய்சிலிர்ப்பு !

உலகப்புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில் பெரியநாயகி அம்மன் ஸ்ரீபெருவுடையார் சுவாமி திரு உலா நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப்புகழ்பெற்று சிறந்து பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி கட்டிட கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறது.

இந்நிலையில் இத்திருக்கோவிலை எழுப்பிய மாமன்னன் இராஜராஜசோழனின் 1035 வது பிறந்தநாளை சதயவிழாவாக அரசு கொண்டாடியது.இந்த விழாவின் நிறைவாக அருள்மிகு பெருவுடையார் பெரியநாயகி திருவுறுவச் செப்புத் திருமேனிகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மகாதீபாரதனை காட்டப்பட்டு பெரிய கோவில் வளாகத்தில் திரு உலா நடைபெற்றது.

மேலும், மாமன்னன் ராஜராஜ சோழனின் திருவுறுவச் சிலைக்கு ஆயிரமாவது முடிசூட்டு விழாவின்போது காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரிய சுவாமிகள் அவர்களால் தங்க கிரீடம் அளிக்கப்பட்டு இருந்தது.

அந்த தங்க கிரீடத்தை அணிவித்து ராசராசசோழன் திரு வீதி உலாவும், மாமன்னன் ராஜராஜசோழன் அவையில் கோயில் தலைமை நிர்வாகியாக இருந்த பொய்கை நாட்டு கிழவன் சூரியன் ஆதித்தனாகிய தென்னவன் மூவேந்த வேளாண் வடித்த மாமன்னர் ராசராசசோழன்,பட்டத்தரசி லோகமாதேவி திருமேனிகள் உலாவும் நடைபெற்றது.

இந்த திருவீதி உலாவில் மேளதாளங்கள் முழங்க சிவகணங்களாக காட்சிதரும் இன்னிசைகள் முழங்க சுவாமி திரு உலா வெகு சிறப்பாக நடைபெற்றது.

Trending News

Latest News

You May Like