1. Home
  2. தமிழ்நாடு

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..! கொச்சியில் மேகவெடிப்பால் 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப்பொழிவு பதிவு!

1

மேகவெடிப்பு எப்படி ஏற்படுகிறது

"மேக வெடிப்பு (Cloud Burst) ஒரு பகுதியில் நடைபெறும் குறுகியகால தீவிர மழைப்பொழிவு ஆகும். பொதுவாக நிலம் சூடாகும்போது நிலத்தில் இருக்கும் நீரும் சூடாகி விரிவடைந்து ஆவியாகும். இதனால் அந்த இடத்தில் அழுத்தம் குறையும். எடை குறைவாக இருப்பதால் நீராவி நிலத்தை விட்டு மேலே ஏறும்.

உயரம் ஏற ஏற வளிமண்டலத் தட்பவெப்பநிலை குறைந்து கொண்டே போகும். 15 கிமீ வரை உயரும் நீராவி குளிர்ந்து அங்கேயே மேகமாக மாறும் இப்படி சேரும் நீர்த்திவலைகள் சேர்ந்து எடை கூடும் நேரம் அந்த மேகங்களின் 'மேல் குளிர் காற்று வீசினால் மழையாகப் பொழியும், குறைந்த நேரத்தில் இந்த செயல்கள் எல்லாம் நடந்து வீரியம் கூடி பொழிந்தால் அது மேக வெடிப்பு என வரையறுக்கப்படுகிறது. சாதாரணமாக மேகம் உருவாகும் நேரத்தை விட குறைந்த நேரத்தில் மழைமேகம் உருவாகி 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவு மழையை ஒரே இடத்தில் கொட்டித் தீர்த்தால் அதுதான் மேக வெடிப்பு.

மேக வெடிப்புகள் பொதுவாக இடியுடன் கூடிய மழையுடன் தொடர்புடையது. மேலும் மழைப் புயலில் மேல்நோக்கிச் செல்லும் காற்று நீரோட்டங்கள் அதிக அளவு தண்ணீரைத் தேக்கி வைக்கும். இந்த நீரோட்டங்கள் திடீரென நிறுத்தப்பட்டால், மொத்த நீரும் ஒரு சிறிய பகுதியில் திடீரென ஒரு அபாயகரமான சக்தியுடன் இறங்கி பேரழிவை ஏற்படுத்துகிறது.

ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டும் உத்தரகாண்ட் மற்றும் இமயமலையின் பல பகுதிகள் மேக வெடிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆபத்துகளை அனுபவிக்கின்றன.

இந்நிலையில்,  கேரள மாநிலம் கொச்சியில் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த கனமழையில் 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. சாலைகளில் மழை நீர் ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like