இருமல் போராட்டம் நடத்தி மருத்துவக் குழுவை விரட்டிய மக்கள்!

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பை சிறப்பாக கையாண்ட கேரளாவில் மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரத்தில் வேகமாக கொரோனா பரவி வருவதாக அரசு தெரிவித்துள்ளது. எனவே அப்பகுதியில் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள பூந்துரா என்ற கிராமத்திற்கு சென்ற மருத்துவக் குழுவினருக்கு அந்தக் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேகமாக கொரோனா பரவும் கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ள பூந்துரா கிராமத்துக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக மருத்துவக் குழுவினர் காரில் சென்றுள்ளனர்.
அவர்களை பின் தொடர்ந்த 70க்கும் மேற்பட்டவர்கள் காரை ஊருக்குள் விடாமல் வழிமறித்துள்ளனர். காரை தாக்கியும் கடும் சொற்களால் வசைபாடியும் அவர்களை அங்கிருந்து போகச் சொல்லியுள்ளனர். மேலும் எங்களுக்கு கொரோனா என்றால் அது உங்களுக்கு வரட்டும் எனக் கூறி மருத்துவக் குழுவினரின் முகத்தின் முன்பு இருமியதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து மருத்துவக் குழுவினர் அவசரமாக அந்தக் கிராமத்தில் இருந்து வெளியேறினர். போலீசார் உதவியின்றி அந்த கிராமத்துக்குள் நுழைய முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
newstm.in