1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் உஷாரா இருங்க.. பூஸ்டர் டோஸ் போடுவதாக கூறி மோசடி.. போலீசார் எச்சரிக்கை..!

மக்கள் உஷாரா இருங்க.. பூஸ்டர் டோஸ் போடுவதாக கூறி மோசடி.. போலீசார் எச்சரிக்கை..!


இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 2-ம் தவணை முடிந்து 9 மாதம் கழித்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது, முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு பல்வேறு ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது.

இந்நிலையில், பூஸ்டர் டோஸ் போடுவதற்கு விருப்பம் தெரிவிப்பவர்கள் செல்போன் எண்ணுக்கு லிங்க் ஒன்றை அனுப்பி, அதில் விவரங்களை பதிவிடுமாறு கோரி செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி.யை கேட்டுப் பெற்று நூதன முறையில் புதிய மோசடி செய்வதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.

லிங்க் மற்றும் ஓ.டி.பி மூலம் செல்போனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்வதாகவும், எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் எனவும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர.

இதுபோன்ற செல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் எனவும், லிங்குகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் எனவும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like