1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தை தவிர்க்கும் உங்களுக்கு இடமில்லை என்பதை வரும் தேர்தலில் மக்கள் நிரூபிக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்..!

1

கோவையில் 10,000 பெண்கள் கலந்து கொண்ட வள்ளி கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சியை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 10,000 பெண்கள் ஒரே நேரத்தில் வள்ளி கும்மி நடனம் ஆடினர்.


விழா மேடையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “என் உரையைத் தொடங்கும் முன்பு 16 ஆயிரம் பெண்களுக்கும் பாராட்டுகள். பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான். இந்த ஆட்சியே மகளிருக்கான ஆட்சி தான் என்பது உங்களுக்கு தெரியும்” என்று தெரிவித்தார்.


தொடர்ந்து, “திமுகவுக்கு வாக்கு அளிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் எனது ஆட்சி இருக்கும் என கூறியுள்ளேன். 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு அமோகமான வெற்றி கிடைத்தது. அது திமுக அரசுக்கு கிடைத்த நற்சான்றிதழ். 2026ல் நாம் தான் வெற்றி பெறுவோம்.

அதே சமயம் பிரதமர் மோடி அரசு தனக்கு வாக்களிக்காத தமிழகத்தை வஞ்சிக்கிறது. ஆனால், அதனையும் தாண்டி நாம் முதலிடத்தில் இருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு தேவையானதை செய்யும் மத்திய அரசு இருந்திருந்தால் நாம் உலக அளவில் முன்னேறி இருப்போம்.


பிரதமர் இலங்கையில் இருந்து வருகிறார். தொகுதி மறுசீரமைப்பு பற்றி சட்டமன்றதில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். கட்சிகளை அழைத்து கூட்டம் நடத்தியுள்ளோம். பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறோம், இதுவரை நேரம் தரப்படவில்லை.


தமிழ்நாட்டிற்கு வரும்போது தொகுதி மறுசீரமைப்பு குறித்து விளக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், பதில் சொல்லவில்லை. மக்களின் முக்கிய பிரச்சனைகள் குறித்து பதில் கூறாமல் தவிர்பவர்களை நாம் என்ன செய்ய முடியும்? தமிழகத்தை தவிர்க்கும் உங்களுக்கு இடமில்லை என்பதை வரும் தேர்தலில் மக்கள் நிரூபிக்க வேண்டும் ” என்று காட்டமாகத் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like