பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம்..!
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நண்பகல் முதல் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மஞ்சள் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பகல் நேரத்தில் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும், தண்ணீர் மற்றும் பழங்களை அதிகளவு பருக வேண்டும் என்று சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.