மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்..! மருத்துவமனைகளில் கூடுதல் பாதுகாப்பு - டிஜிபி.!
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு தலைவராக பணியாற்றி வருபவர் பாலாஜி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் மகன் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை சரமாரியாக குத்தினார்.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை மருத்துவமனை ஊழியர்களே மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, அரசு மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர், காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்படிப்பட்ட சூழலில், இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மருத்துவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவம் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் போடப்பட்டுள்ளது. இரவு நேர பாதுகாப்பையயும் அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.