1. Home
  2. தமிழ்நாடு

மக்களே கவனம்.. வேகமெடுக்கும் கொரோனா: நேற்று 1.59 லட்சம்.. இன்று 1.79 லட்சம்..!

மக்களே கவனம்.. வேகமெடுக்கும் கொரோனா: நேற்று 1.59 லட்சம்.. இன்று 1.79 லட்சம்..!


இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 723 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது, நேற்று முன் தின பாதிப்பான ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 986 மற்றும் நேற்றைய பாதிப்பான ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 632-ஐ விட மிக அதிகம் ஆகும்.

இதனால், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 57 லட்சத்து 7 ஆயிரத்து 727 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா பாதிப்பில் இருந்து 46 ஆயிரத்து 569 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 172 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 லட்சத்து 23 ஆயிரத்து 619 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 83 ஆயிரத்து 936 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, நாடு முழுவதும் இதுவரை 151.94 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like