மக்களே கவனம்..! மருத்துவமனைக்கு படையெடுக்கும் மக்கள்..!
தமிழகம் முழுவதும் பரவலாக மழை கொட்டி வருகிறது. குறிப்பாக சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றைய மழையால் சென்னையில் பல இடங்கள் வெள்ளக்காடானது.
இதன் காரணமாக காய்ச்சல் அதிகரித்துள்ளது. அதோடு சேர்த்து சளி, இருமல், மூச்சுவிட சிரமம், தொண்டை வலி, உடல் வலி ஆகிய அறிகுறிகள் பலருக்கு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற மக்கள் நாளுக்கு நாள் அதிகம் கூடுகின்றனர்.
பருவமழை காலங்களில் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும், இதனால் மக்கள் காய்ச்சிய குடிநீர், சுத்தமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.