1. Home
  2. தமிழ்நாடு

தெலுங்கானா மக்கள் ஷாக்..! இனி வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்வு..!

1

தெலுங்கானாவில் அரசின் தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகள் துறையின் முதன்மைச் செயலாளர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த புதிய உத்தரவின்படி, கடைகளைத் தவிர்த்து மற்ற வணிக நிறுவனங்களில் தொழிலாளர்களின் தினசரி வேலை நேரம் 8 மணியிலிருந்து 10 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது.

இருப்பினும், வாராந்திர வேலை நேரம் 48 மணி நேர வரம்பை தாண்டக் கூடாது என்ற விதிமுறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். தொழிலாளர்கள் தொடர்ச்சியாக 6 மணி நேரம் வேலை செய்த பிறகு, குறைந்தபட்சம் 30 நிமிட இடைவேளை வழங்கப்பட வேண்டும் என்று இந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் அண்மையில் இதேபோன்ற 10 மணி நேர வேலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைப் பின்பற்றி, தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த மாற்றங்கள், தெலங்கானா மாநிலத்தில் வணிகச் செயல்பாடுகளை மேம்படுத்துவதோடு, தொழிலாளர் நலனையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. 

Trending News

Latest News

You May Like