1. Home
  2. தமிழ்நாடு

கோவை மக்களே உடனே சார்ஜ் போட்டுக்கோங்க..! இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை 'பவர்கட்'..!

1

மாதம்தோறும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வழக்கம். அந்த சமயங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில், கோவை மாவட்டத்தில் சில இடங்களில் மின் வாரியம் சார்பில் பராமரிப்புப் பணிகள் இன்று  (ஜனவரி 9 ஆம் தேதி) மேற்கொள்ளப்படவுள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது. பீளமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அதனிடமிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் இன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் தடைபடும். பீளமேடு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளான பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி.எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை ஏற்படவுள்ளது.

அதேபோல, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே - அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதுார், எல்லை தோட்டம், வ.உ.சி., காலனி, பி.கே.டி.நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதி புரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்ரமணியா நகர், பாலகுரு கார்டன், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர்.

மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு ஒருபகுதி, நஞ்சுண்டாபுரம் ரோடு மற்றும் திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் தடைபடவுள்ளது.

Trending News

Latest News

You May Like